சனி, 2 ஜூன், 2012

காதல்


மிதவாதியாய் இருந்தேன்
தீவிரவாதியாய் புகுந்தாய்
மதியில் உன்னை அழிக்க நினைத்து
நதியில் நீரைப் பிரிக்க நினைத்தேன்
நெஞ்சுக்குள் புகையாய் பரவி கிடந்தாய்
கலைக்க முடியவில்லை
என்னுள் உன்னைத் தேடி
உன்னுள் என்னைத் தொலைத்தேன்

ஞாயிறு, 27 மே, 2012

நான் ஏன் புகை பிடிக்கிறேன் ?

Gateway for graveyard
நான் ஏன் புகை பிடிக்கிறேன் ?
இது என்னடா ஒரு விஷயம்னு கேக்குறிங்களா? சும்மா ஒரு சாக்ரடீசின் 
ஏன் எதற்கு எப்படின்னு ஒரு அலசல் தான் ( க்கும் , நல்ல விஷயத்துக்கு 
எல்லாம் இத கடைபிடிக்காதீங்க  ! ).
பாயிண்ட் பாயிண்ட்டாக சொல்கிறேன் , இல்லேன்னா கட்டுரை மாதிரி ஆகிடும்.
முதன் முதலாக கல்லூரி முதலாண்டு படிக்கும் போது சக நண்பனின் ஆலோசனையின் பேரில் ஒரு மழைக்காலத்தில்குளிர் தெரியாமலிருக்க (!)ஒரு சிகரெட்டை இருவரும் பாதி பாதி அடித்தோம்  .  புகையை இழுத்து
 உடனே விட்டவுடன் நண்பன் கேலி செய்தவுடன் இரண்டாவது இழுப்பை 
தம் கட்டி புகையை விட முயற்சி செய்தேன் ஆனால் புகை வரவில்லை , மயக்கம் தலைசுத்தல் தான் வந்தது ,உடனே பாத்ரூம்க்கு ஓடினேன் முகத்தை கழுவினேன் ,தண்ணி குடித்தேன் , கொஞ்ச நேரத்தில் சரி கிவிட்டது
Ash or man?


அன்றைக்கு ஆரம்பித்த பழக்கம் விடமுடியவில்லை . ஆனால் செயின் ஸ்மோகர் , அப்பிடியெல்லாம் கிடையாது , ஓர் நாளைக்கு 1 அல்லது 2 தான் அதிகம். சொந்த ஊர்  கிராமத்துக்கு  போனால் பெரியப்பா  சித்தப்பா பையன் வழி அண்ணன் தம்பி, அத்தை பையன்  எல்லாம் சேர்ந்தால் கணக்கில்லாமல் அடிப்போம் . அது ஒரு ஜாலி , நினைத்தாலே இனிக்கும் . சில நாட்கள் நினைப்பே இல்லாமலும் இருப்பேன் அதனால் என்னை பொறுத்தவரை இது பெரிய விஷயமில்லை .




Both kills
அப்புறம் சும்மா இருக்கும் பொது ஐன்ஸ்டீன் gravity force கண்டுபிடிச்சமாதிரி தம் அடிக்கிறத பத்தி யோசிச்சு ஒரு conclusion க்கு வந்திருக்கேன்
அது என்னான்னா, ஏன் புகைக்கிறாங்கன்னு பார்த்தா


ஸ்டைலுக்காக  ( பொண்ணுகள கவர் பண்ண காலேஜ் பசங்க ?, படிச்சு முடிச்சு வேலை சேர்த்தவுடன் கெத்தாக )
டென்ஷன் ஆனா  ( வீடு ,வேலை ,மனைவி ,உயரதிகாரி ,பண காசு தொல்லை )
ஆண்மையின் சின்னமாக சிலர் ? (அடிக்கலன்னா பசங்க கிண்டல் பண்ணுவாங்க )
பொழுது போகாத போது (வேற நல்ல வேலையே இல்லையா?)
அப்பிடி என்னதான் இருக்குன்னு  தெரிஞ்சுக்குற ஆர்வத்தில ( அப்பிடிதான் நானும் ஆரம்பிச்சேன்  ஹம் )
அப்புறம் முக்கியமான காரணம் நிப்பாடிட்டா இந்த தொழில நம்பி இருக்கிறவங்க குடும்பம்லாம் நடுத்தெருவிலே நிக்குமேன்னு !!
அரசாங்கத்தோட  தலையாய ரெண்டாவது வருமானம் (முதல் வருமானம்  டாஸ்மாக் ) பாதிக்கப்படுமேன்னு !!!
chumma jokku





நான் சொன்னதுல பல விஷயங்கள் ரொம்ப முக்கியமானது , என்னடா இவன் காமடி பண்றன்னு நினைக்காதிங்க
கண்டிப்பா இதனால விழிப்ணர்வு வரும்னுதான் எழுதினேன் , ரெண்டு நாள் முன்னாடி புகைபவர்கள் எண்ணிக்கை எதோ ஒரு
5 % கிட்ட உயர்ந்திருக்கிறதா செய்தி பார்த்தேன் அதனாலே நம்மள முடிஞ்சது செய்வோம்முன்னு எழுதி இருக்கேன்
நம்மளுக்கு நிறுத்துங்கன்னு சொன்ன கடுப்பயிடுவாங்க , அதே கொஞ்சம் கமத்யா சொன்னா மனசுலயும் நிக்கும் , ஏத்துக்கவும்
செய்வாங்க . அதான் உடனே குதிச்சிட்டேன் .







                                                                                                                                
                                   

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

கோவில்களின் சீரமைப்பு சாராய வியாபாரிகளின் கையில் ?




கோயில்னு சொன்னவுடனேயே எல்லோர்க்கும் அவங்கவங்க இஷ்டமான 
கோயில் ஞாபகத்துக்கு வரும் தானே.எனக்கும் அப்படிதான் கோயில்கள் 
ஞாபகத்துக்கு வருது .கூடவே சில நெருடல்களும் தான் . என்னடா இவன் கோயில்
சொன்னவுடனேயே பக்தி ,நிம்மதி , பரவசம் பரவசம் தானே தோணுது ,இவன் 
என்னடா இப்படி சொல்லறனேன்னு பார்க்கிறீர்களா ? எங்க ஊரு கோயில் பழமையான , பாடல் பெற்ற தலமும் கூட. அதுல என்ன பிரச்சனை ? இப்ப மாறி வருகிற அல்ட்ரா மாடர்ன் காலத்தில் கோயில்களும் மாறிவருகிறது .
ஒரு சின்ன டியுப்ளைட்ட மாட்டிட்டு வெளிச்சமே வராத அளவுக்கு அதுல  பெயர் எழுதுறது கூட பரவாயில்லங்க , கோயில் திருவிழா அட்டவணை
நோட்டீஸ்ல சாமி பேருக்கு அப்புறம் அவங்க சுய விளம்பரம் தான் வரிசையா இருக்கு ,அதுகூட பரவாயில்லீங்க , ஆனா இந்த சாராய வியபாரியா இருந்து பிரமுகராக உருவெடுத்த தலைங்க புண்ணியத்துல
சாமிக்கு தங்க நகைகள் காணிக்கையாக வழங்குவதும் , ஆடம்பர செலவுகள் செய்வதும் , சன்னதிகள் குளிரூட்டம் செய்வதும் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.பல அடித்தட்டு மக்களின் சொற்ப வருமானத்தை சுரண்டி , அவர்களின் உடல்நலத்தையும் ,வாழ்க்கையையும்
சீரழிக்கும் அவர்களின் பணதில்தானா இதெல்லாம் நடக்கவேண்டும்?
என்னதான் புண்ணிய காரியமென்றாலும் கோயில் நிர்வாகிகள் இதற்க்கு
முட்ட்ருபுள்ளி வைக்கவேண்டும் . இதைவிட சும்மாவே இருக்கலாம் என்பது என் கருத்து.என்னவோ போங்க நம்ம சொல்றது யார் காதிலே விழபோவுது , அந்த ஆண்டவன அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்.