கோயில்னு சொன்னவுடனேயே எல்லோர்க்கும் அவங்கவங்க இஷ்டமான
கோயில் ஞாபகத்துக்கு வரும் தானே.எனக்கும் அப்படிதான் கோயில்கள்
ஞாபகத்துக்கு வருது .கூடவே சில நெருடல்களும் தான் . என்னடா இவன் கோயில்
சொன்னவுடனேயே பக்தி ,நிம்மதி , பரவசம் பரவசம் தானே தோணுது ,இவன்
என்னடா இப்படி சொல்லறனேன்னு பார்க்கிறீர்களா ? எங்க ஊரு கோயில் பழமையான , பாடல் பெற்ற தலமும் கூட. அதுல என்ன பிரச்சனை ? இப்ப மாறி வருகிற அல்ட்ரா மாடர்ன் காலத்தில் கோயில்களும் மாறிவருகிறது .
ஒரு சின்ன டியுப்ளைட்ட மாட்டிட்டு வெளிச்சமே வராத அளவுக்கு அதுல பெயர் எழுதுறது கூட பரவாயில்லங்க , கோயில் திருவிழா அட்டவணை
நோட்டீஸ்ல சாமி பேருக்கு அப்புறம் அவங்க சுய விளம்பரம் தான் வரிசையா இருக்கு ,அதுகூட பரவாயில்லீங்க , ஆனா இந்த சாராய வியபாரியா இருந்து பிரமுகராக உருவெடுத்த தலைங்க புண்ணியத்துல
சாமிக்கு தங்க நகைகள் காணிக்கையாக வழங்குவதும் , ஆடம்பர செலவுகள் செய்வதும் , சன்னதிகள் குளிரூட்டம் செய்வதும் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.பல அடித்தட்டு மக்களின் சொற்ப வருமானத்தை சுரண்டி , அவர்களின் உடல்நலத்தையும் ,வாழ்க்கையையும்
சீரழிக்கும் அவர்களின் பணதில்தானா இதெல்லாம் நடக்கவேண்டும்?
என்னதான் புண்ணிய காரியமென்றாலும் கோயில் நிர்வாகிகள் இதற்க்கு
முட்ட்ருபுள்ளி வைக்கவேண்டும் . இதைவிட சும்மாவே இருக்கலாம் என்பது என் கருத்து.என்னவோ போங்க நம்ம சொல்றது யார் காதிலே விழபோவுது , அந்த ஆண்டவன அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக